நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரலாற்றில் முதன் முறையாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு 2025ஆம் ஆண்டுக்கான நம்பிக்கை விருது விழாக்களை ஆதரிக்கிறது

கோலாலம்பூர்:

வரலாற்றில் முதல் முறையாக துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் தொழில்முனைவோர் மேம்பாடு  கூட்டுறவு அமைச்சு 2025ஆம் ஆண்டுக்கான நம்பிக்கை சர்வதேச வர்த்தகர் விருது விழா ஏற்பாடு செய்வதற்கு முழு ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

இந்திய தொழில்முனைவோரின் பங்கை வலுப்படுத்தும் அமைச்சின் முயற்சிகளின் ஓர் அங்கமாக இது அமைகிறது.

இந்த சரித்திரப்பூர்வமான ஆதரவு மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் இந்திய தொழில்முனைவோர் உருமாற்ற திட்டம் (EIP) மூலம் வழங்கப்படுகிறது.

இஐபி என்பது ஒரு மேம்பாட்டுத் திட்டம் மட்டுமல்ல, இது உலகளாவிய வணிக வலையமைப்புகளின் அங்கீகாரம், திறன் மேம்பாடு, அதிகாரமளிப்புக்கான ஒரு தளமாகும்.

இந்த ஆதரவு, பெண்கள், இளைஞர்கள், புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும்.

அதே வேளையில், தங்களுக்கென ஒரு பெயரைப் பெற்ற இந்திய தொழில்முனைவோரின் வெற்றியை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இது குறிக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

இது போன்ற அங்கீகாரம் மூலம் இந்திய தொழில்முனைவோர் நாட்டில் வெற்றியை அடைவது மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையிலும் ஊடுருவ முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

அமானா இக்தியார், தெக்குன் மலேசியா, எஸ்எம்இ கோர்ப், எஸ்எம்இ வங்கி, பேங்க் ரக்யாத், பெர்னாஸ், இக்மா, இன்ஸ்கேன் ஆகியவை அமைச்சின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்கள் மூலம் நிதி, வணிக பயிற்சி, உலகளாவிய நெட்வொர்க்குகளை அணுக இணைக்கும் ஒரு பாலமாக இஐபி செயல்படுகிறது.

மேலும் இந்த முயற்சிகள் அனைத்தும், எல்லா சமூகங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகள் நியாயமாகவும் உள்ளடக்கியதாகவும் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன.

இவ்விருதுகளை ஏற்பாடு செய்வதில் பேங்க் ரக்யாட்டின் ஈடுபாட்டின் மூலம் அதிகாரப்பூர்வ ஆதரவு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக இந்திய தொழில்முனைவோரின் நிலையை வலுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான முற்போக்கான ஒத்துழைப்பைக் குறிக்கிறது.

இந்த ஆதரவு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல.

மிகவும் நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான படியாகும்.

மேலும் இந்திய சமூகத்திற்கான சிறப்பு முயற்சிகளை செயல்படுத்தும் நிறுவனங்கள் வெற்றிகரமான இந்திய தொழில்முனைவோரை அங்கீகரிக்க முன்வரும். 

தொழில்முனைவோர் உலகில் சேர அதிகமான மக்களை ஊக்குவிக்க இவர்கள் தூதர்களாகவும் ஊக்கமளிக்கும் சின்னங்களாகவும் ஆக்கப்படுவார்கள்.

நம்பிக்கை சர்வதேச வர்த்தக விருதுகள், ஸ்டார் ஐகோன் விருதுகள் 2025 ஆகியவற்றிற்கான ஆதரவு, மதானி அரசாங்கம் இந்திய தொழில்முனைவோரின் பங்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கியாக வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது என்பதற்கு சான்றாகும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset