செய்திகள் மலேசியா
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சம்சுல் ஹரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
கடந்த ஜூலை 28ஆம் தேதி ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளர் அம்சுல் ஹாரிஸ் ஷம்சுதிடின் மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணமான அல்லது தொடர்புடைய நபர்களை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.
கொலை குற்றத்திற்காக மரண வழக்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்க சட்டத் துறை தலைவர் அலுவலகத்தின் முடிவைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.
விசாரணை முடிவுகள் பெறப்பட்ட பிறகு, விசாரணை ஆவணங்கள் மத்திய அரசியலமைப்பின் பிரிவு 145 இன் விதிகளின்படி அறிவுறுத்தல்களுக்காக ஏஜிடிக்கு திருப்பி அனுப்பப்படும்.
போலிசார் தனது விசாரணையை முடிக்கும் வரை இந்த வழக்கைப் பற்றி ஊகிக்க வேண்டாம்.
இந்த நாட்டில் குற்றவியல் நீதியின் கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
