செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: ஜொகூர் கல்வி இலாகா விளக்கம்
ஜொகூர்பாரு:
தமிழ்ப்பள்ளிகளில் உள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்ற கோரி எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை.
ஜொகூர் மாநில கல்வி இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக விளக்கியது.
ஊடக தகவல்களின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளி வளாகத்திலிருந்து திருவள்ளுவர் சிலைகளை அகற்ற உத்தரவு தொடர்பான வைரலான பிரச்சினையை ஜொகூர் மாநில கல்வி இலாகா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
குறிப்பாக ஜொகூர் மாநில கல்வி இலாகா அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்க விரும்புகிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜொகூர் மாநில கல்வி இயக்குநர் விரைவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒரு அமர்வை நடத்துவார்.
கல்வி நிறுவனங்களின் அனைத்து உறுப்பினர்களின் நல்வாழ்வையும் நல்லிணக்கத்தையும் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக மத உணர்வுகள், பல்லின சமூகங்களுக்கு பாதிக்காமல் எப்போதும் முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதனை மாநிலத்தில் உள்ள கல்வி இலாகா அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
December 1, 2025, 12:34 pm
