நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை

பத்துகேவ்ஸ்:

பத்துமலை திருத்தலத்திற்கு  அஜித்குமார் வருகை புரிந்தார்.

சிப்பாங் அனைத்துலக கார் பந்தய தளத்தில் கார் பந்தயப் போட்டி நடைபெறுகிறது.

இப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார் மலேசியா வந்துள்ளார்.

நேற்று இரவு அவர் மலேசியா வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் ஆகியோரை அவர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து பத்துமலை மேல்குகைக்கு சென்று அவர் இறைவனை வணங்கினார்.

பில்லா 2 படப்பிடிப்பின் போது அஜித்குமார் பத்துமலைக்கு வருகை புரிந்தார்.

அதன் பின் அவர் மீண்டும் பத்துமலைக்கு இப்போது வருகை புரிந்துள்ளார்.

இந்த நினைவுகளை அவர் டான்ஸ்ரீ நடராஜாவுடன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset