நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர்:

நான்கு அமைச்சர் பதவிகளில் தற்போது காலியாக உள்ளதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்த நேரத்திலும் மறுசீரமைப்பைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் பதவிகளுக்கு பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நான்கு அமைச்சுகளை வழிநடத்தும் அமைச்சர் பதவிகளை நிரப்புவதற்கான புதிய நியமனங்களைத் தவிர, தற்போதுள்ள அமைச்சரவை உறுப்பினர்களிடையே இலாகா மாற்றங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

துறைகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுபவர்களில் தோட்டக்கலை, பொருட்கள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனியும் ஒருவர். 

அவர் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சு அல்லது பொருளாதார அமைச்சிற்கு மாற்றப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காலியாக உள்ள அமைச்சர் பதவியை நிரப்புவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் பிற பெயர்கள், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சராக உள்ள கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், பாதுகாப்புத் துறை துணையமைச்சராக உள்ள அமானா துணைத் தலைவர் அட்லி ஜஹாரி ஆகியோரும் அடங்குவர்.

கெஅடிலான் துணைத் தலைவர் நூருல் இஸா அன்வார், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோர் செனட்டர்களாக நியமனம் செய்யப்படுவதன் மூலம் அமைச்சரவையில் சேர்க்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

மேலும் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உதவித் தலைவருமான சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியும் ஒரு சாத்தியமான அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset