நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை  மெட் மலேசியா இயக்குநர் ஜெனரல் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இதனை உறுதிப்படுத்தினார்.

வெப்பமண்டல புயல் சென்யார் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாட்டின் வான்வெளியில் நுழைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரா, சிலாங்கூர், பகாங்கின் சில பகுதிகள் உட்பட புயலின் தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பமண்டல புயல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்தோனேசியாவைத் தாக்கத் தொடங்கியது.

பின்னர் தீபகற்பத்திற்குள் நுழைந்து தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்தது என்று அவர் கூறினார்.

இது 24 மணி நேரத்திற்குள் நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது நடந்தால், 1996 இல் கிரெக்,  2001 இல் வாமெய்க்குப் பிறகு நாட்டைத் தாக்கும் மூன்றாவது வெப்பமண்டல புயலாக இது இருக்கும்.

இன்று இங்கு வெப்பமண்டல புயல் சென்யார் பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset