செய்திகள் மலேசியா
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் வெற்றியை செகாமா சட்டமன்ற தொகுதி மக்கள் உறுதி செய்ய வேண்டும்: செனட்டர் சரஸ்வதி
கோத்தா கினபாலு:
நம்பிக்கை கூட்டணி வேட்பாளரின் வெற்றியை செகாமா சட்டமன்ற தொகுதி மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.
சபா மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு செகாமா தொகுதியில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் ரோமான்ஸா லமினுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தாமான் வாரிசான் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு சுற்றுவட்டார மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
நிலையான அரசியல் சூழல், மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்கும் அரசாங்கம், சமூக மேம்பாடு ஆகியவற்றை அங்குள்ள மக்கள் எதிர்பார்பதாக சரஸ்வதி கூறினார்.
அதோடு நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரோமான்ஸா லமினை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டு கூறினார்.
- உறுதியான பொருளாதார மேம்பாடு
- சமூக நலன், வாழ்க்கை செலவினத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
- இந்த பகுதி உட்பட சபா முழுவதிலும் மேம்பாடுகள் மற்றும் வாய்ப்புகளை கொண்டு வருவதில் ஒற்றுமை அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு.
- இந்தப் பகுதியில் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு சகோதரர் ரோமான்ஸா லமின் தலைமைத்துவம் முக்கியமானதாகும்.
மக்களின் வலுவான ஆதரவுடன், செகாமாவில் உள்ள குடும்பங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று நான் தாம் நம்புவதாக சரஸ்வதி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 11:04 pm
டிசம்பர் 27ஆம் தேதி ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: மலேசியா வருகிறார் விஜய்
November 21, 2025, 5:49 pm
கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நேர்கின்றன: டத்தோஸ்ரீ ஜனசந்திரன்
November 21, 2025, 5:47 pm
மகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வரும் இந்திரா காந்திக்கு துணை நிற்போம்: குணராஜ்
November 21, 2025, 5:46 pm
பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை
November 21, 2025, 12:23 pm
