நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நேர்கின்றன: டத்தோஸ்ரீ ஜனசந்திரன்

புத்ராஜெயா:

கனரக வாகனங்கள் விதிகளை முறையாகப் பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நிகழ்வதற்கு முக்கிய காரணமாகும். அதற்காக சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.

போக்குவரத்து துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் இதனை கூறினார்.

நாட்டில் லோரி உட்பட கனரக வாகனங்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

குறிப்பாக அவ்வாகனங்களுக்கு எதிரான சட்டங்கள், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதனால் கனரக வாகனங்களில் ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளனர்.

அவர்களின் அதிருப்திகளும் கோபங்களும் எங்களுக்கு புரிகிறது.

ஆனால் நாட்டில் நிகழும் கோரமான விபத்துகள் தான் அரசாங்கத்தின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

சாலைகளில் தினசரி நடக்கும் விபத்துகளும் அதனால் ஏற்படும் மரணங்களையும் நாம் அனைவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆக இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் மீது கோபப்படுவதை நிறுத்திவிட்டு கனரக வாகன ஓட்டுநர்கள் சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

அனைத்தும் சட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று டத்தோஸ்ரீ ஜனசந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset