நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

ஈப்போ:

தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளியின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் நர்மதா ஆறுமுகம், தாரினி தயானந்த், திவிஷா சிவராஜ சமீபத்தில் டென்பசார், பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்க போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

இந்த போட்டியில் அனைத்துலக ரீதியில் 24 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.

மொத்தம் 300க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

மலேசியாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் வந்த நிலையில், பேரா மாநிலத்திலிருந்து ஒரே ஒரு அணியாக இப்பள்ளி பங்கேற்றது.

மேலும், வட கிந்தா மாவட்டத்திலிருந்து வெளிநாடு சென்ற முதல் புதுமை அணி என்ற பெருமையையும் நிலை நாட்டியுள்ளது.

மாணவர்கள் உருவாக்கிய ரேப்டக்ஸ் பாம்பு விரட்டும் திட்டம் பள்ளி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது.

இந்த யோசனை சர்வதேச மேடையில் பாராட்டைப் பெற்றது, பள்ளியின் பெயரை உலகளவில் உயர்த்தியது.

இந்த சாதனை சாத்தியமானது பள்ளித் தலைமை ஆசிரியர் சரஸ்வதி பரமசிவம் அவர்களின் அயராத முயற்சியால் அவர் பல்வேறு தானதாரர்களை அணுகி நிதி உதவிகளை பெற்றார்.

குறிப்பாக, நிதியுதவி வழங்கிய டத்தோ சிவனேசன் பள்ளி சமூகமே மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் வழங்கிய ஆதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

பள்ளி சமூகமே அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset