நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராளர் மாநாட்டில் ஜாஹிட்டை விமர்சித்ததற்காக மஇகா தலைவரை ஜம்ரி சாடினார்

கோலாலம்பூர்:

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கட்சியின் நலன்களைப் புறக்கணித்ததாகக் கூறி மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

அவரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.

மஇகாவின் சமீபத்திய ஆண்டு பொதுக் கூட்டத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அறிக்கையை பொருத்தமற்ற ஒன்று.

எந்தவொரு கருத்தையும் கூற எங்களிடம் நடைமுறைகள், மிக உயர்ந்த கவுன்சில் தளம் இருப்பதால், இதற்கு முன்பு எந்த தேசிய முன்னணி உறுப்பு  கட்சியும் இதைச் செய்ததில்லை.

மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்டு பொதுக் கூட்டத்தில், மஇகாவின் நலன்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜாஹிட்டை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குற்றம் சாட்டினார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தில் கட்சி தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதற்கு இதுவே காரணம் என்றும் கூறினார்.

நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்றும் முடிவையும் அவர் விமர்சித்தார்.

இது தேசிய முன்னணியின் கூட்டு எதிர்காலத்தை அல்ல. அம்னோவின் உயிர்வாழ்வைப் பாதுகாப்பதற்காகவே எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மஇகா கூட்டணியை விட்டு வெளியேறும் சாத்தியக்கூறு குறித்து, கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய முன்னணியில் அவர்கள் ஒன்றாகச் சந்தித்த போராட்டத்தின் திருப்பங்களிலிருந்து கற்றுக் கொள்ளுமாறு அதன் தலைவர்களை டத்தோஸ்ரீ ஜம்ரி வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset