நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈசிஆர்எல் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி நொறுங்கிய கார்: பெண் உயிர் தப்பினார்

கோம்பாக்:

ஈசிஆர்எல் கட்டுமான இடிபாடுகளில் சிக்கி நொறுங்கிய காரில் இருந்த் பெண் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் இன்று பத்துகேவ்ஸில் உள்ள எம்ஆர்ஆர் 2 சாலையில் நடந்தது.

இச்சம்பவத்தில் இடிபாடுகளால் கார் நசுக்கப்பட்டதாக நம்பப்பட்டதால், ஒரு பெண் கிட்டத்தட்ட இறக்கும் நிலையில் இருந்து தப்பினார்.

இந்த சம்பவத்தில், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பொதுமக்களால் பாதிக்கப்பட்டவர் வெற்றிகரமாக காரில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.

இசிஆர்எல் கட்டுமான இரும்புகள் ஒரு சுசுகி ஸ்விஃப்ட் காரின் மீது விழுந்தது.

இருப்பினும், தீயணைப்புப் படை வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்டவர் பொதுமக்களால் மீட்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset