நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாங்கள் மஇகாவை சந்தித்து விவாதிப்போம்: முஹம்மது ஹசான்

கோத்தா கினபாலு:

தேசிய முன்னணி கூட்டணியில் உள்ள கட்சிகளின் எதிர்காலம் குறித்து மஇகாவின் உயர்மட்டத் தலைமையுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முயற்சிக்கும்.

தேசிய கூட்டணி துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் தெரிவித்தார்.

கடந்த வார இறுதியில் 79ஆவது மஇகா பொதுச் சபையில் பிரதிநிதிகள் நிறைவேற்றிய தீர்மானத்தை மஇகாவின் உயர்மட்டத் தலைமை சிறந்த முறையில் பரிசீலிக்கும் என நம்புகிறேன்.

இதனால் அவர்களின் தலைவர்கள் தேசிய முன்னணியை விட்டு வெளியேறி தேசியக் கூட்டணியுடன் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கலாமா வேண்டாமா என்பதை சரியான நேரத்தில் முடிவு செய்வார்கள்.

மஇகாவின் உயர்மட்டத் தலைமை முடிந்தவரை சிறப்பாகவும், முடிந்தவரை ஆழமாகவும் சிந்திப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் மஇகா நீண்ட காலத்திற்கு முன்பு நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தபோது அம்னோ, மஇகாவுடன் இணைந்திருந்த ஒரு கட்சி.

மஇகாவிற்கும் தேசிய முன்னணிக்கும் இடையிலான நல்ல உறவு மிக நீண்டது.

நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.

எனவே விளக்கப்பட வேண்டிய அல்லது தெளிவுபடுத்தப்பட வேண்டிய தவறான புரிதல்கள் ஏதேனும் இருந்தால், அதை ஒன்றாக விவாதிப்பது நல்லது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset