நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து தலைவர்கள் கூடுவதால் டான்ஸ்ரீ மொஹைதின் வீடு இன்றிரவு ஒரு பரபரப்பான இடமாக மாறும்?

கோலாலம்பூர்:

பெர்சத்து தலைவர்கள் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் வீட்டில் இன்று கூடுவார்கள் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் கோலாலம்பூரின் புக்கிட் டாமன்சாரா இன்றிரவு அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு பரபரப்பான இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், ஜாலான் செத்தியா பக்தியில் உள்ள அவரது பங்களாவுக்கு வெளியே டான்ஸ்ரீ மொஹைதின் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

டான்ஸ்ரீ மொஹைதின் இன்று இரவு தனது இல்லத்தில் பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு விருந்து அளிப்பார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வான் சைபுல், வான் அஹ்மது ஃபைசால், கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 19 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட குழு டான்ஸ்ரீ மொஹைதின் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரவு உணவு சமரச முயற்சியாகக் கருதப்பட்டது.

- பார்த்திபன் நாகரஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset