நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சுசீலா அம்மாவுக்கு இன்று 90 வயது.

அவருடைய இனிய குரலுக்கு மயங்காத இதயங்களும் உண்டா?

தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு சுசீலா அம்மா ஒரு முன்மாதிரி.

ண, ன வேறுபாட்டைக்கூடத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்.

(கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல- பாடல் நல்ல எடுத்துக்காட்டு)

பிடித்த பாடல் என்று 
எதைச் சொல்ல? எதைவிட?

சுசீலா அம்மாவின் பாடல்களைக் கேட்டுதான் நாங்கள் வளர்ந்தோம். 

கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பது போல,

“மலர்ந்தும் மலராத” பாடலில் 
அந்த ஒரு 
“விசும்பலைக் கேட்டு 
விசும்பியது விசும்பு.”

பாடலின் காட்சிக்கு என்ன உணர்ச்சி வேண்டுமோ -  சோகம், கவலை, காதல், மகிழ்ச்சி, தாலாட்டு, கோபம், எள்ளல் என எந்த உணர்ச்சி தேவையோ
 அதைத் தம் அற்புதக் குரலில் அழகாக வெளிப்படுத்தினார்.

“மன்னவன் வந்தானடி”
“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?” 
போன்ற செவ்வியல் பாடல்களாக இருந்தாலும் சரி- 

“கெடச்சா கஞ்சித் தண்ணி
கெடைக்காட்டி கொயா தண்ணி
இருக்க இருக்கையிலே
இன்னாத்துக்குக் கவல கண்ணி”
என்று சென்னைத் தமிழ்ப் பாடலாக இருந்தாலும் சரி-

தம் உதட்டசைவில் அந்த உலகத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுவார்.

இசைக்கு இறைவன் அளித்த ஓர் அருட்கொடை சுசீலா அம்மா.

இன்னும் பல்லாண்டு பல்லாண்டு நோய்நொடிகள் இல்லாமல் வாழ இறைவனின் திருவருள் துணை நிற்கட்டும்.

-சிராஜுல்ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset