நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

குழந்தைகள் தினத்தில் திரைக்கு வருகிறது 'கிணறு'

கோடம்பாக்கம்:

கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வருகிறது. 

Madras Stories தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர், புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்தப்படம் உருவானது.

Burqa, Lineman போன்ற விமர்சக பாராட்டுகளை பெற்ற படங்களைத் தொடர்ந்து, கிணறு குழந்தைத்தனம், நட்பு, நம்பிக்கை, குடும்ப உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதையை சொல்லுகிறது. Burkha உலக திரைப்பட விழாக்களில் 5 சர்வதேச விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

கதை

ஒரு கிராமத்தில் நாலு பிள்ளைகள், அருகிலுள்ள வீட்டின் கிணற்றில் விளையாடுவதற்காக அடக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படுகிறார்கள். அதனால், தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறை நம்பிக்கைகள் மற்றும் தடை அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் இப்பயணம் குழந்தைகளின் கண்களில் அழகாகச் சொல்லப்படுகிறது.

விருதுகள் & விழாக்கள்

    •    Pegasus Film Festival 2024 – Award Winner
    •    Accolade Global Film Competition – Award of Merit
    •    Accolade Global Film Competition – Special Mention – Award of Merit போன்ற பல்வேறு விருதுகளை இந்தப்படம் வென்றுள்ளது. 

ஹரிகுமார் இயக்கியுள்ள இந்தப்படத்தை  கவுதம் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவனேஷ் செல்வநேசன் இசையமைத்துள்ளார். 

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும், உணர்ச்சியும் நகைச்சுவையும் நிறைந்த குடும்பப்படமாக கிணறு வெளியாகிறது இந்த திரைப்படம்.

- நிகில் முருகன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset