செய்திகள் மலேசியா
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
கோலாலம்பூர்:
புதுடில்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற துயரத்தால் துயரத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயங்கரவாதச் செயலாக உறுதிப்படுத்தப்பட்டால், அது மிகக் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.
அப்பாவி மக்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைக்கும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் எந்த நியாயமும் இல்லை என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுக்கள், அதிகாரிகளுக்கும் டத்தோஸ்ரீ அன்வார் தனது நன்றியைத் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
