நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

அஜித் குமார் மோட்டார் சைக்கிள் கூட்டணி நிகழ்ச்சி: 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள் பங்கெடுப்பு

கோலாலம்பூர்:

மலேசிய அஜித் ரசிகர் மன்றம் (Malaysia Ajith Fan Club) நடத்திய “Ajith Kumar Bikers Gathering” நிகழ்ச்சி  200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகள், 500க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி, தல அஜித்தின் மோட்டார் சைக்கிள் பந்தய ஆர்வத்தையும், மனிதாபிமான மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது. 

இந்நிகழ்ச்சியின் போது, சமூகப்பணியின் அடையாளமாக அமைப்பினர், மோட்டார் விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு தலா 500 ரிங்கிட்டை வழங்கினர்.

மேலும் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் அதோடு ஒரு மாத உணவுப் பொருட்கள் (1000 ரிங்கிட் மதிப்பில்) வழங்கினர்.

அஜித் குமார் எடுத்துச் சொல்வது போல, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நற்பண்பு ஆகிய மூன்றையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

மலேசிய அஜித் ரசிகர்கள் கழகத்தின் ஏற்பாட்டில், ரசிகர்கள், மோட்டார் சைக்கிளோட்டிகள், ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்து ஒரு அர்த்தமுள்ள நாளை உருவாக்கினர்.

இது வெறும் ரசிகர் இயக்கம் அல்ல, நெஞ்சை தொடும் மனிதாபிமான குடும்பம் என ரசிகர் மன்றத்தின் தலைவர் டேவ் எனும் தேவேந்திரன் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset