நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்

லிஸ்பன்:

போர்த்துகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான தியாகோ ஜோத்தா கடந்த ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கி பலியானார். 

இந்த துயர விபத்தில் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் பலியானார். .

ஜோத்தாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.

அவரது இறுதி ஊர்வலத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோ பங்கேற்கவில்லை. இது சர்ச்சையை கிளப்பியது. 

சக நாட்டு வீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்கு கூட ரொனால்டோ வரவில்லை என பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ரொனால்டோவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரொனால்டோ, மக்கள் என்னை அதிகம் விமர்சிக்கிறார்கள்.  அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. 

உங்கள் மனசாட்சி நல்லதாகவும் சுதந்திரமாகவும் இருக்கும்போது, ​​மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நான் அங்கு செல்லாததற்கு 2 காரணங்கள் உள்ளன.

ஒன்று, என் அப்பா இறப்புக்குப் பிறகு ஒருபோதும் மீண்டும் கல்லறைக்கு செல்லவே கூடாது என இருந்தேன். 

2ஆவது நான் எங்கு சென்றாலும், கூட்டத்தின் கவனம் என் மீது திரும்பும். அது நடக்க நான் விரும்பவில்லை என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset