நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியது; ஒருவர் மரணம், 90க்கும் மேற்பட்டோர் காணவில்லை: போலிஸ்

அலோர் ஸ்டார்:

சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கிய சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

90க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கெடா போலிஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா இதனை தெரிவித்தார்.

சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிர் பிழைத்தனர்.

மேலும் 90க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

லங்காவிக்கு அருகிலுள்ள மலேசிய-தாய்லாந்து கடல் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது.

அந்தப் படகு மியான்மர், வங்காளதேசம், ரோஹிங்கியா குடிமக்களைக் கொண்ட சுமார் 300 பேரை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய கப்பலின் ஒரு பகுதியாகும்.

பின்னர் நாட்டின் எல்லையை நெருங்கும்போது மூன்று சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டது.

மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், 

ஆனால் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாகப் பயணம் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset