நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவிற்கான 40% வருவாய் உரிமைகள்; முடிவு மதிப்பாய்வில் உள்ளது: ஃபஹ்மி

கோத்தா கினபாலு:

சபா மாநிலத்திற்கான 40% வருவாய் உரிமைகள் தொடர்பான முடிவு மதிப்பாய்வில் உள்ளது.

மேலும் அரசியலமைப்பின்படி மாநில உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

சபாவின் வருவாயில் 40% திரும்பக் கோரும் கோரிக்கையின் மீதான முடிவு முதலில் ஆராயப்பட வேண்டும்.

இதனால் பிரச்சினை தொடர்பான அனைத்து வழிமுறைகளும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன

மேலும் எதிர்காலத்தில் எந்த முறைகேடுகளும் ஏற்படாது.

இந்த நடவடிக்கை 1963 மலேசியா ஒப்பந்தம் (எம்ஏ 63) இன் கீழ் சான்றளிக்கப்பட்ட சபாவின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவசியம்.

மேலும் இந்த விவகாரத்தில் அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு இணங்குவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset