செய்திகள் மலேசியா
சபா கூட்டுறவுக் கழகங்கள், தொழில்முனைவோரை வலுப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஆதரிக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
கோத்தா கினபாலு:
சபா கூட்டுறவுக் கழகங்கள், தொழில்முனைவோரை வலுப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஆதரிக்கும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
கோட்டா கினபாலுவில் மலேசிய கூட்டுறவு ஆணையம் ஏற்பாடு செய்த புதிய கூட்டுறவு நிர்வாகத்தை வலுப்படுத்தும் திட்டத்தில் கலந்து கொண்டேன்.
இதில் 200க்கும் மேற்பட்ட கூட்டுறவுக் கழக உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்தத் திட்டம் புதிய கூட்டுறவுக் கழகங்களுக்கு சட்டம், மேலாண்மை, நிர்வாக அம்சங்கள் குறித்த முக்கியமான வெளிப்பாட்டை வழங்கியது.
இதனால் அவை மிகவும் திறம்பட, நிலையான முறையில் செயல்பட முடியும்.
மேலும் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களான எச்எம்இ வங்கி, எச்எம்இ கோர்ப், அமானா இக்தியார் மலேசியா, தெக்குன், பேங்க் ரக்யாட், பெர்னாஸ் ஆகியவை சபாவில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்கள், தொழில்முனைவோருக்கு பல்வேறு முயற்சிகள், நிதி வசதிகளை அறிமுகப்படுத்தியது.
வணிகத் திறன்களை வலுப்படுத்தவும் பொருளாதார வலைப்பின்னல்களை விரிவுபடுத்தவும் வழங்கப்படும் ஒவ்வொரு வாய்ப்பையும் தொழில்முனைவோர், கூட்டுறவுக் கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் எப்போதும் வலியுறுத்துகிறேன்.
அதன் அடிப்படையில் சபா உட்பட நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அமைச்சு அதன் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து தொடர்ந்து வழிகாட்டவும் உதவவும் உறுதிக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இதனால் ஒவ்வொரு கொள்கையும் முன்முயற்சியும் மக்களின் நலனுக்காக இணக்கமாக செயல்படுத்தப்படும்.
எனவே, சபா மாநில அரசு இந்த மாநிலத்தை மேம்படுத்தவும் அதன் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் கூடிய வளர்ச்சிக் கொள்கைகளை செயல்படுத்துவதில் மத்திய அரசுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2025, 1:07 am
சபா மாநிலம், மக்களின் வளர்ச்சியை மடானி அரசு உறுதி செய்யும்: குணராஜ்
November 9, 2025, 12:23 am
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை இவோன் பெனடிக் ராஜினாமா செய்தார்
November 8, 2025, 6:38 pm
ஈப்போ ஜாலான் துன் ரசாக் மேம்பால நிர்மாணிப்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
