செய்திகள் மலேசியா
சபா மாநிலம், மக்களின் வளர்ச்சியை மடானி அரசு உறுதி செய்யும்: குணராஜ்
கோத்தா கினபாலு:
சபா மாநிலம், அம்மாநிலத்தில் வாழும் மக்களின் வளர்ச்சியை மடானி அரசு உறுதி செய்யும்.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.
சபா மாநில தேர்தல் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெறவுள்ளது.
இத்தேர்தல் தயார் பணிகளை பார்வையிடுவதுடன் அங்குள்ள மக்களை சந்திக்கும் நோக்கில் நான் கோத்தா கினபாலு சென்றேன்.
அங்கு பல அரசியல் தலைவர்கள் உட்பட மக்களை சந்தித்தேன்.
குறிப்பாக சபாவிற்கு மூன்று நாள் அலுவல் பயணமாக வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தில் வரவேற்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
உள்ளூர் சமூகங்கள், அடிமட்டத் தலைவர்களுடனான ஈடுபாடுகள், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட வணிக மற்றும் முதலீட்டு கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அவரது பயணத் திட்டம் நிரம்பியிருந்தது.
சபாவின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும், மாநில, கூட்டரசு நிர்வாகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மத்திய அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த வருகை அடிக்கோடிட்டுக் காட்டியது.
ஆக மொத்தத்தில் சபா மாநிலம், மக்களின் வளர்ச்சியை மடானி அரசு உறுதி செய்யும் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 9, 2025, 1:08 am
சபா கூட்டுறவுக் கழகங்கள், தொழில்முனைவோரை வலுப்படுத்தும் முயற்சிகளை அமைச்சு ஆதரிக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 9, 2025, 12:23 am
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் பதவியை இவோன் பெனடிக் ராஜினாமா செய்தார்
November 8, 2025, 6:38 pm
ஈப்போ ஜாலான் துன் ரசாக் மேம்பால நிர்மாணிப்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
November 8, 2025, 4:28 pm
அம்னோ மீது கோபமில்லை; முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மஇகா உள்ளது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:42 pm
ஆயிரம் பொய்கள் சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்காக போராடும் ஒரே கட்சி மஇகா தான்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
November 8, 2025, 3:41 pm
