நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீடித்த தகராறுகள் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவிக்கின்றன: பிரதமர் அன்வார்

கோத்தா கினபாலு:

நீடித்த அரசியல் சர்ச்சைகள் நாட்டிற்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த பிரச்சினைகள் நிலையான பொருளாதார மேம்பாட்டுக் கொள்கைகளில் கவனம் செலுத்தும் அரசாங்கத்தின் திறனைப் பாதித்துள்ளன.

ஆக அரசியல் சண்டைகள் என்ற கலாச்சாரத்தை நிறுத்திவிட்டு, பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

நிர்வாக நிலைத்தன்மை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதிகாரப் போராட்டமாக அல்ல, பொருளாதார வலிமையே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டிய கட்டத்தில் மலேசியா உள்ளது.

நாங்கள் பல ஆண்டுகளாக பணத்தை இழந்து வருகிறோம், அரசியல் சண்டைகள் ஒருபோதும் முடிவடையவில்லை.

சபா தொழில் சங்கத்துடனான ஒரு அமர்வில் அவர் ஆற்றிய உரையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset