நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ ஜாலான் துன் ரசாக் மேம்பால நிர்மாணிப்பு பணிகளை துரிதப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை 

ஈப்போ: 

ஜாலான் துன் ரசாக் ஈப்போ மாநகரின் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் பல அரசாங்க இலாகா, தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன், குடியிருப்பு பகுதிகளான பல தாமான்களையும் இந்த சாலையை இணைக்கிறது. தற்போது இச்சாலையையும் புந்தோங்கையும் இணைக்கும் மேம்பாலத்தில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்த மேம்பால கட்டமானப் பணிகள் தொடங்கிய பின் சில முக்கிய சாலைகள் இங்கே மூடப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தையும், அவதியையும் எதிர்நோக்கி வருவதாக மக்களின் குமுறலை சிலர் வெளியிட்டனர்.

இந்த மேம்பால கட்டுமானப்பணிகள் ஈப்போ மாநகர் மன்றம், பேராக் பொதுப்பணித்துறை ஒன்றிணைந்து செய்கின்றனர். தற்போதைய மேம்பாலம் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்பொழுது புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இத் திட்டம் நீண்ட காலத்திற்கு மக்களின் தேவையை நிறைவு செய்யக்கூடியது. 

இருப்பினும், தற்போது இம்மேம்பாலம் இல்லாமையால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியோர்கள் பல வகையான அவதிகளை எதிரநோக்குகின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த கட்டுமானப்பணியை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த மேம்பாலம் புந்தோங், தாமான் பெர்தாமா குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலமாகும்.
ஆதலால், இந்த மேம்பாலம் புந்தோங்கில் அமைந்துள்ள பல ஆலயங்களை இணைக்கக் கூடியது. அத்துடன், அடுத்தாண்டு பிப்ரவரி மாத முதல் தேதியில் தைப்பூசம் நடைபெறவுள்ளது. இங்குள்ள ஜாலான் சுங்கை பாரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து காவடிகள், இரத ஊர்வலம் நடைபெறும் பகுதியாகும். ஆகையால், இந்த தைப்பூச திருவிழாவிற்கு முன்னதாக மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றால் அனைவருக்கும் சிறப்பாகும்.

அத்துடன், இந்த மேம்பால கட்டுமானப்பணிகளால் இங்குள்ள ஜாலான் துன் பேராக் வணிக கடைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதனால் வாடிக்கையாளர்கள் இங்குள்ள கடைகளுக்கு வருவதில்லை. இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு பேராக் மாநில அரசும், ஈப்போ மாநகர் மன்றமும் மேம்பால பணிகளை வேகமாக முடித்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset