நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி

கோலாலம்பூர்:

அடுத்த 2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர் இதனை கோடிக்காட்டினார்.

செனட் உறுப்பினர்களாக பல அமைச்சர்களின் பதவிகளைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அமைச்சரவை மாற்றம் நிகழக்கூடும்.

புத்ராஜெயா ஐடியாஸ் விழாவின் நிறைவில் பேசுகையில், எனது நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.

காரணம் நான் 2022 டிசம்பரில் செனட்டராகப் பதவியேற்றேன் என அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை அமைச்சராக தனது கதி என்னவென்று தெரியவில்லை.

மேலும் அடுத்த ஆண்டு விழாவை ஏற்பாடு செய்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆதரவை நான் பெறுவேன் என நான் நம்புகிறேன்.

நான் இன்னும் அமைச்சராக இருக்கிறேனா இல்லையா என்பது தான் இரண்டாவது கேள்வி.

பிரதமர் சிரித்துக் கொண்டே எனக்கு ஒரு சமிக்ஞை கொடுக்க வேண்டும். ஏனென்றால் நான் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் போய்விடுவேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset