செய்திகள் மலேசியா
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
கோலாலம்பூர்:
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்.
மலேசியா தனது விளையாட்டு பாரம்பரியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் “அல்-சுல்தான் அப்துல்லாவுடன் நடைப்பயணம்” நிகழ்வில் மூலம் கொண்டாடியது.
மெர்டேகா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன், பகாங்கின் தெங்கு அம்புவான், துங்கு அசிசா அமினாஹ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
யாயாசன் அல்-சுல்தான் அப்துல்லா, செக்கினா பிஆர் உடன் ஏற்பாடு செய்த இந்த நடைப்பயணத்தில் மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்கள், முன்னாள் தேசிய விளையாட்டு வீரர்கள் உட்பட 150 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் டத்தோ லியோங் முன் யீ, நோர் சைபுல் ஜைனி நசிருடின், சாந்தி கோவிந்தசாமி, ஜக்ஜித் சிங், டத்தோ சந்தோக் சிங், டத்தோ சோ சின் ஆன், டத்தோ ரஷித் சிடேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் முக்கிய அங்கமாக தேசிய விளையாட்டாளர்கள் சமூக நல அமைப்புக்கு 60,000 ரிங்கிட்டை சுல்தான் வழங்கினார்.
அதே வேளையில் தேசிய, மாநில முன்னாள் கால்பந்து வீரர்கள் சங்கத்திற்கு 40,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
இது மலேசியாவின் விளையாட்டு வீராங்கனைகள் மீது அவர் காட்டும் அக்கறையை பிரதிபலிக்கிறது.
இந்த முயற்சி அல்-சுல்தான் அப்துல்லாவின் இதயத்திற்கு நெருக்கமானது.
ஏனெனில் இது மலேசியாவை பெருமைப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு, நன்றியை பிரதிபலிக்கிறது என்று அல்-சுல்தான் அப்துல்லா அறவாரியம் கூறியது.
இந்த நிகழ்வுக்கு பாட்டா, எப்.டபிள்யூ.எச்.எஸ் மெடிக், மெர்டேகா 118, டி.சி.எஸ் என்டர்டெயின்மென்ட், எட்டிகா, பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையம் ஆகியவற்றிலிருந்து வலுவான ஆதரவு கிடைத்தது.
இந்த நிகழ்வு மலேசியாவின் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும், நல்வாழ்வு, பாரம்பரியம் மூலம் சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்தை உண்மையிலேயே நிறைவேற்றியது.
இந்த நாளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என்று செக்கினா பிஆர் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கிறிஸ்டபர் ராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
