நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது

செர்டாங்:

கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 6 இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டனர்.

செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஃபாரித் அகமது கூறினார்.

செர்டாங்கின் பூசாட் பண்டார் பூச்சோங்கில் உள்ள ஒரு கடையின் படிக்கட்டுகளில் நேற்று ஒருவர் இறந்து கிடந்தார்.

வெட்டுக் காயங்களுக்கு இலக்கானதால் அவ்வாடவர் மரணமடைந்துள்ளார்.

இது  தொடர்பான வழக்கு விசாரணையில் உதவ ஆறு இந்திய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொல்லப்பட்டவரின் வீட்டுத் தோழர்கள் ஆவர்.

இதில் முக்கிய சந்தேக நபர், ஒரு இந்திய நாட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாங்கள் அந்த இடத்தில் சிசிடிவி கேமராக்களையும் சரிபார்த்து வருகிறோம், விசாரணைக்கு உதவக்கூடிய காட்சிகள் உள்ளன  என்று அவர் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக புகார்தாரர் உட்பட நான்கு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொல்லப்பட்ட நபர் சுமார் 19 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்ததாகவும் சுயமாக எலக்ட்ரீஷியனாக தொழில் செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset