நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோவில் இணைய நேரம் வந்ததும், ​​ நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி

கோலாலம்பூர்:

அம்னோவில் இணைய நேரம் வந்ததும், ​​அதை நான் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன்.

முன்னாள் ரெம்பாவ் அம்னோ தலைவர் கைரி ஜமாலுடின் இதனை கூறினார்.

மீண்டும் அம்னோவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், கைரி ஜமாலுடின் அமைதியாக இருந்தார்.

பின் விரைவில் இந்த விஷயத்தில் ஒரு முடிவை அறிவிப்பதாக மட்டுமே அவர் கூறினார்.

மீண்டும் கட்சியில் சேர விண்ணப்பப் படிவத்தை அனுப்பியுள்ளாரா என்று கேட்டபோது, நேரம் வரும்போது நான் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்றார்.

முன்னதாக அம்னோவில் மீண்டும் இணைவதற்கான தனது நோக்கம் குறித்து பதிலளிக்கத் தயாராக இருப்பதற்கு சில வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு கைரி கோரியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset