நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

நாடு முழுவதும்  கூட்டுறவு கடைகளின் (கோர்ப் மார்ட்) வலையமைப்பை வலுப்படுத்த அமைச்சு உறுதி கொண்டுள்ளது,

இது போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்து உறுப்பினர்களுக்கும் உள்ளூர் சமூகத்திற்கும் பயனளிக்கிறது.

இன்றுவரை நாடு முழுவதும் 2,623 கூப் மார்ட் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் 652 கூட்டுறவு விற்பனை நிலையங்கள், 120 கல்லூரி, உயர் கல்விக் கூட விற்பனை நிலையங்கள், 1,807 பள்ளி விற்பனை நிலையங்கள், 39 டி மார்ட் விற்பனை நிலையங்கள், ஐந்து அங்காசா மார்ட் விற்பனை நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

கோர்ப் மார்ட்டின் அடையாளத்தை தரப்படுத்துதல், கூப் மார்ட் பிராண்ட் சின்னங்களாக முக்கிய நகரங்களில் கருத்துரு கடைகளைத் திறப்பதன் மூலம் கோர்ப் மார்ட்டின் பிம்பத்தை மலிவு விலையில் பிராண்ட் செய்து ஊக்குவித்தல் செயல்படுத்தப்படுகிறது.

மலேசியா முழுவதும் உள்ள கூப் மார்ட் கடைகளின் எண்ணிக்கை, அது போட்டித்தன்மையுடன் இருப்பதையும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வருமானத்தை வழங்குவதையும் உறுதிசெய்ய இன்னும் செயலில் உள்ள எண்ணிக்கை குறித்து சுங்கை பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முஸ்லிமின் யஹாயாவின் கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset