நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

'முட்டாள்' என்று சொன்னதால் போட்டியை விட்டு விலகிய அழகுராணிகள்

பேங்காக்:

தாய்லந்தில் நடக்கவிருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு இயக்குநர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

போட்டியாளர்களைக் காட்டும் நேரலையில் நவாட் இட்சாராகிரிசில் (Nawat Itsaragrisil) மெக்சிகோ அழகுராணியை "முட்டாள்" என்று திட்டியுள்ளார்.

அழகுராணி, தாய்லந்தைச் சற்றும் விளம்பரப்படுத்தவில்லை என்றும் அவர் மெக்சிகோ பிரபஞ்ச அழகி அமைப்பின் இயக்குநருடைய பேச்சைக் கேட்டு அவ்வாறு செய்ததாகவும் இட்சாராகிரிசில் குற்றஞ்சாட்டினார்.

"நீங்கள் உங்களுடைய நாட்டு இயக்குநருடைய பேச்சைக் கேட்டால், நீங்கள் ஒரு முட்டாள்," என்றும் இட்சாராகிரிசில் சொன்னார்.

பதிலுக்குப் பேசிய மெக்சிகோ அழகுராணியை மடக்க இட்சாராகிரிசில் பாதுகாலவர்களை அழைத்தார்.

அதைக் கண்ட மெக்சிகோ அழகுராணி அறையை விட்டுக் கிளம்பினார்.

மற்ற நாட்டு அழகுராணிகள் சிலரும் ஒவ்வொருவராக அறையை விட்டுப் புறப்பட்டனர்.

இட்சாராகிரிசில் அவமரியாதையாகப் பேசியதாகப் பிரபஞ்ச அழகிப் போட்டி அமைப்பு பின்னர் சாடியது.

இட்சாராகிரிசில் தலை குனிந்து, நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டார்.

தாம் 'முட்டாள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் அவர் சொன்னார்.

'இயக்குநரின் பேச்சைக் கேட்டால் சேதம் ஏற்படும்' என்று சொல்லவந்ததாக இட்சாராகிரிசில் சொன்னார்.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset