நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர்:

மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மெர்டேக்கா கோபுரம் 118 சிவியூ-ஆல் சிறந்த உயரமான கட்டிடமாக (300 மீட்டர் மற்றும் அதற்கு மேல்) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் உயரமான கட்டிட வடிவமைப்பு, நகர்ப்புற திட்டமிடலில் சிறந்து விளங்கும் கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற சிவியூ 2025 விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

மேலும் இந்த அங்கீகாரம் உலக அரங்கில் மலேசியாவிற்கு மற்றொரு பெருமைமிக்க சாதனையாகும்.

உயரமான கட்டிடங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விடங்களுக்கான கவுன்சில்  என்று முன்னர் அழைக்கப்பட்ட சிவியூ, வானளாவிய கட்டிடங்கள், நவீன நகர்ப்புற வாழ்க்கை குறித்த முன்னணி அதிகாரிகளில் ஒன்றாகும்.

இந்த அங்கீகாரம், நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதில் மெர்டேகா 118 இன் கட்டிடக்கலை திறமை, பொறியியல் நிபுணத்துவம், அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று பிஎன்பி மெர்டேகா வென்ச்சர்ஸ்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset