நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஷாஆலம்:

மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (டபள்யூசிஇ) திட்டத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள கிள்ளான் கம்போங் ஜாவாவில் உள்ள மொத்தம் 19 நில உரிமையாளர்கள், அந்த இடத்தை காலி செய்ய ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று குடியிருப்பாளர்கள், தொடர்புடைய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பான தீர்வு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில வீட்டுவசதி, கலாச்சார ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமன் ஷா இதனை கூறினார்.

1960 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தும் செயல்முறை சட்டப்பூர்வமாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் படிவம் கே வழங்கப்பட்டது.

இருப்பினும், மொத்த 9.85 மில்லியன் ரிங்கிட் 75 சதவீத இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட பகுதியை காலி செய்யாத 19 நில உரிமையாளர்கள் இன்னும் அங்கு உள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset