நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனுக்கு நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து கூறுகளும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யுமாறு மலேசிய கல்வி அமைச்சு கோரியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மாணவரின் குடும்பத்தினரின் அறிக்கையை முழுமையாகக் கவனத்தில் கொள்வதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில், வழக்கு இன்னும் போலிசாரின் விசாரணையில் உள்ளது.

குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இறந்தவரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, நெகிரி செம்பிலானில் உள்ள செனாவாங்கில் உள்ள தனது பள்ளி கழிப்பறையில் 10 வயது மாணவர் ஒருவர் மயக்க நிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவர் அக்டோபர் 1 ஆம் தேதி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகளின்படி, மரணத்திற்கான காரணம் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் என்றும் பாதிக்கப்பட்டவரின் உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset