நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர்:

எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி அமர்ஜீத் சிங்  இந்த அனுமதியை வழங்கினார்.

வழக்கறிஞர் குர்தியல் சிங் நிஜார், மூத்த கூட்டாட்சி வழக்கறிஞர் நூர்ஹாஃபிசா அசிசான் ஆகியோரின் சமர்ப்பிப்புகளைக் கேட்ட பிறகு, பறிமுதல் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு நிறுவனத்தின் விண்ணப்பத்தை டிசம்பர் 1 ஆம் தேதி விசாரிக்க நிர்ணயித்தார்.

எம்ஏசிசி சொத்தை அபகரிப்பதைத் தடுக்க டிசம்பர் 1 ஆம் தேதி வரை இடைக்காலத் தடையையும் நீதிபதி வழங்கினார்.

நாளை நீங்கள் சொத்தை பறிமுதல் செய்தால் விசாரணை தேதியை நிர்ணயிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

இப்போது முதல் அடிப்படை விசாரணை வரை எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் முழு விண்ணப்பத்தையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset