நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்

கோலாலம்பூர்:

கைரி ஜமாலுடின் விவகாரம் குறித்து அம்னோ இன்னும் விவாதிக்கவில்லை.

ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை அம்னோ தலைவர் ஜாஹித் ஹமிடி கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மீண்டும் கட்சியில் இணைவது குறித்து அம்னோ இன்னும் எந்த விவாதத்தையும் நடத்தவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெர்லிஸ் அம்னோ தொடர்புத் தலைவர் டத்தோ ரோசாபில் அப்துல் ரஹ்மானின் மகள் திருமணத்தில் கைரியைச் சந்தித்தபோது, ​​

தாமே இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கவோ அல்லது தொடவோ இல்லை என்று அவர் கூறினார்.

இதுவரை எந்த விவாதங்களையும் நடத்தவில்லை. நான் அவரை ஒரு திருமணத்தில் மட்டுமே சந்தித்தேன்.

நாங்கள் எதையும் பற்றி விவாதிக்கவில்லை.

இன்று புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில்  நடைபெற்ற புத்ராஜெயா யோசனை விழா 2025 இல் முக்கிய உரையை ஆற்றிய பின்னர் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset