நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன

அம்பாங்:

அம்பாங்கில் உள்ள முதியாரா கோர்ட் அருகிலுள்ள தாமான் புக்கிட் பெர்மாயிலில் பாறைகள் சரிந்து விழுந்த சம்பவங்களில் மொத்தம் ஆறு கார்கள் சேதமடைந்தன.

அம்பாங்க் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் முகமட் அசாம் இஸ்மாயில் இதனை கூறினார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மலையிலிருந்து பாறைகள் சரிந்திருப்பது கண்டறியப்பட்டது.
காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் நடந்த இந்த சம்பவத்தில் ஐந்து கார்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.

மேலும் பெரோடுவா கன்சில் கார் முற்றிலுமாக சேதமடைந்ததாக அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

பாண்டன் இண்டா தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset