நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண மலேசியா வந்துள்ளார் நடிகர் கார்த்தி

கோலாலம்பூர்:

Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண நடிகர் கார்த்தி மலேசியா வந்துள்ளார்.

இயக்குநர் லோகேஸ் கனகராஜ் இயக்கி நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.

இந்தியாவை தவிர்த்து  நாடுகளிலும் இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரிமேக் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரோ ஷா, நம்பர் ட்வென்டி ஒன் மீடியா இணைந்து இந்த பண்டுவான் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

டத்தோ ஆரோன் ஹஜிஸ் இத்திரைப்படத்தில் கார்த்தி வேடத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.

இந்நிலை இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்ப்பதற்காக நடிகர் கார்த்தி மலேசியா வந்துள்ளார்.

சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த நடிகர் கார்த்தியை டத்தோ ஆரோன் வரவேற்றார்.

Dalli meets Dali  என்ற அடிப்படையில் அவர்கள் இருவரது வீடியோ பதிவுகளும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset