செய்திகள் மலேசியா
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
பெட்டாலிங்ஜெயா:
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர். கட்சிக்கும் நான் தான் தலைவர் என்று புனிதன் உறுதியாக கூறினார்.
எம்ஐபிபி எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியில் தலைவரான நான் அக்கட்சியின் உறுப்பினர் அல்ல என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக ஆண்டுக் கூட்டம் தொடர்பில் சங்கங்களின் பதிவிலாகாவில் புகார் செய்யப்பட்டுள்ளது என ஒரு சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உண்மையில் இவ்விவகாரத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.
காரணம் இரண்டு ஆண்டுகளாக நான் கட்சியின் தலைவராக உள்ளேன்.
கட்சியை வலுப்படுத்தியதுடன் தேசியக் கூட்டணியில் முக்கிய கட்சியாக எம்ஐபிபி விளங்கி வருகிறது.
ஆண்டுக் கூட்டம், தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பு, தேர்தல் பிரச்சாரம் என கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நான் கட்சியில் உறுப்பினர் அல்ல. இதனால் கட்சிக்கு தலைவர் என குற்றம் காட்டுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளால் எனக்கும் மக்களுக்கும் சிரிப்பு தான் வரும்.
ஆக யார் என்ன சொன்னாலும் நான் தான் எம்ஐபிபி கட்சியின் தேசியத் தலைவர் ஆகும்.
இதை யாராலும் மாற்ற முடியாது. அதே வேளையில் இது தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் நான் தயார்.
பெட்டாலிங்ஜெயாவில் நடைபெற்ற எம்ஐபிபி கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
