செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
பந்திங்:
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு இதனை வலியுறுத்தினார்.
பிங்காஸ் எனப்படும் வாழ்வாதார உதவி திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு நவம்பர் மாத இறுதியில் மூடப்படும்.
பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது சட்டமன்ற தொகுதி சேவை மையத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து தேவையான ஆவணங்கள் முழுமையாக பதிவேற்றப் பட வேண்டும். அது சரிபார்ப்பு செயல்முறையை எளிதாக்கும்.
இந்த முறை திட்டத்தின் நடைமுறைப்படுத்த லில் எந்த மாற்றமும் இல்லை.
அனுமதிக்கப்பட்ட பொருட்களின் வகைகளும், பங்கேற்கும் சூப்பர் மார்க்கெட்டுகளும் முந்தையபடி நீடிக்கின்றன என்று கூறினார்.
மாதம் 300 ரிங்கிட் மதிப்புள்ள இந்த உதவி 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
இது உணவு, மருந்துகள், கல்வி உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படும்.
இந்த புதிய விண்ணப்பங்கள், இன்னும் பூர்த்தியாகாத இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய திறக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த உதவி தேவைப்படுவோர் www.bingkasselangor.com இணையதளம் அல்லது Selangkah பயன்பாட்டின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பந்திங்கில் இன்று நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுக்கு பாப்பாராயுடு இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
