நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வழக்கில் ந டவடிக்கை இல்லாத போதிலும், மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது: ஃபட்லினா

கோலாலம்பூர்:

வழக்கில் நடவடிக்கை இல்லாத போதிலும்,  மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு முழுப் பொறுப்பையும் ஏற்கிறது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு பள்ளியில் கழிவுநீர் குழாயில் விழுந்து ஒரு மாணவர் இறந்தார்.

இந்த சம்பவம் அடுத்த நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்டிருந்தது.

இருந்தாலும் பள்ளியில் மாணவர் பாதுகாப்பிற்கு கல்வியமைச்சு இன்னும் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.

பள்ளிகளில் பாதுகாப்பு என்பது நிர்வாகிகளின் முழுப் பொறுப்பு.

எதிர்பாராத விபத்துகள் ஏற்படும் என்று அஞ்சப்படும் பகுதிகளில், அனைத்து வசதிகளும் நன்கு பராமரிக்கப்படுவதையும் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுவதையும் உறுதி செய்வது இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset