நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்

கோத்தா கமுனிங்:

கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இதனை கூறினார்.

இன்று நாம் தீபாவளியை கொண்டாடுவதற்காக மட்டுமல்ல, நன்றி செலுத்துவதற்காகவும் கூடுகிறோம்.

பள்ளிகள், குடியிருப்பாளர்கள் சங்கங்கள், அரசு சாரா இயக்கங்கள், இந்திய சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகள் கோத்தா கமுனிங் சட்டமன்றத்தில் முன்னேற்றத்துடன் ஒற்றுமையின் உயிர்நாடியாகும்.

அவர்களின் முயற்சிகள் இல்லாமல், சமூகத்தை மேம்படுத்துவதற்கான பல முயற்சிகள் பலனளித்திருக்காது.

ஒற்றுமை,  சமூக நலனை வலுப்படுத்துவதில் பல்வேறு கட்சிகளின் தொடர்ச்சியான முயற்சிகள் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நமது சமூகத்திற்கான சேவை, தன்னார்வத் தொண்டு உணர்வைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மேலும் நம் சமூகத்திற்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகள், அரசு சாரா நிறுவனங்கள், குடியிருப்பாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு சுவாரஸ்யமான செயல்பாடுகள், பல்வேறு இனங்களின் கலாச்சார நிகழ்ச்சிகள்,  மக்களுக்கான பாரம்பரிய தீபாவளி உணவுகள் ஆகியவையும் இந்த நிகழ்வில் இடம் பெற்றன.

சிலாங்கூர் மாநிலத்திலும் முழு நாட்டிலும் நல்லிணக்கத்தின் தூணாக இருக்கும் நல்லெண்ணம், சகிப்புத்தன்மையின் உணர்வை வலுப்படுத்தும்.

இனம், மதத்தைப் பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்து மட்டங்களும் ஒரு பெரிய மலேசிய குடும்பமாக ஒன்றுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset