நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதுகுவலி காரணமாக பிரதமர் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்

புத்ராஜெயா:

முதுகுவலி காரணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகாங்கிற்கான பயணத்தை ரத்து செய்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் அவர் இன்று பகாங் மாநிலத்திற்கான தனது அலுவல் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மருத்துவக் குழு அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதை அடுத்து, கடைசி நிமிடத்தில் இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்வார் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது செயல்பாடுகள் தடைப்பட்டுள்ளது.

இதனால் பிரதமர் அலுவலகம் டத்தோஸ்ரீ அன்வார் சார்பில் மன்னிப்பை தெரிவித்து கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset