நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்

கோத்தாபாரு:

கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் கால்பந்து அணியின் இறக்குமதி வீரர் ஆவார்.

கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் கூறினார்.

சுங்கை கோலோக் நகரில் நேற்று மலேசிய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் இறக்குமதி கால்பந்து வீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று தனது அதிகாரிகள் நடத்திய உள் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் இது கண்டறியப்பட்டது.

இரட்டை குடியுரிமை கொண்டதாக நம்பப்படும் சந்தேக நபரை தேடுவதற்காக போலிஸ் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், இந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இறக்குமதி செய்யப்பட்ட கால்பந்து வீரர் என்ற சந்தேக நபரை நாங்கள் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளோம்.

சாலைத் தடுப்புகளை அமைப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து எல்லைக் கட்டுப்பாட்டு நிறுவனங்களையும் கண்காணிப்பை வலுப்படுத்துமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset