நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு ஹெல்மட்: துணையமைச்சர் சரஸ்வதி வழங்கினார்

கோலாலம்பூர்:

செராஸ் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு தலைக்கவசம் (ஹெல்மட்) வழங்கப்பட்டது.

அப்பள்ளிக்கு நேரடியாக வருகை தந்த தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

சாலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இம்முயற்சி நோக்கமாகக் கொண்டது.

மேலும் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மாணவர்களுக்கான  பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.

ஹெல்மெட்களைப் பெற்ற மாணவர்கள் போக்குவரத்துச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதுடன் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து தங்கள் பெற்றோருக்கு நினைவூட்டுவதாக சரஸ்வதி கூறினார்.

தெரிவிக்கப்பட்ட பாதுகாப்புச் செய்தியை நோக்கி மாணவர்களின் உற்சாகத்தையும் புரிதலையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதில் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக பள்ளி, தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset