நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாப்பான் நகர சமூக வளர்ச்சிக்கு RM8,000 நிதியுதவி: பத்து காஜா எம்.பி சிவக்குமார் வழங்கினார்

பத்து காஜா:

பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் தனது தொகுதியில் உள்ள அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்கும் ஆதரவு வழங்குவதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். 

அதன்படி, மலேசியா தினத்தை முன்னிட்டு “பாப்பான் ரெட்ரோ நிகழ்ச்சி 2025-ஐ” வெற்றிகரமாக நடத்தியதற்காக, சமூக ஒற்றுமை குழுவான (KRT) பாப்பான் அமைப்பிற்கு RM8,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவி அடித்தள வசதிகளுக்கு மட்டும் அல்லாது, பாரம்பரியம், பண்பாடு, வரலாறு, உள்ளூர் அடையாளத்தை வலுப்படுத்துவதையும் உள்ளடக்கியது என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இத்தகைய நிகழ்ச்சிகள், தேசப்பற்றை ஊக்குவிப்பதோடு, மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி, இளைஞர்கள், உள்ளூர் மக்களின் செயற்பாட்டுப் பங்கேற்புக்கு வாய்ப்பளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதியுதவி காசோலையை வழங்குவதற்காக, அவர் நேரில் பாப்பான் நகருக்கு சென்று, அங்குள்ள சமூகத்தினரின் முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார்.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset