நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்

கொச்சின்:

கடந்த சனிக்கிழமை கேரளாவில் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் கனமழை பெய்த நேரத்தில் எதிர்பாராத மண்சரிவு ஏற்பட்டதில்
பிஜு என்பவர் வீட்டின் மீது பாராங்கல் விழுந்து வீடு முற்றிலும் இடிந்தது.

இடிபாடுகளில் சிக்கி கணவர் பிஜு
சம்பவ இடத்திலேயே உயிரிழக்க,
அவரின் மனைவி சந்தியா மீட்புப் படையினர் மூன்று மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர், ஆலுவா ராஜகிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சந்தியாவின் மீது காங்கிரீட் ஸ்லாப் விழுந்து அவரது ஒரு காலில் ஏற்பட்ட பலத்த காயம் அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததால் கால் துண்டிக்கப்பட்டது..

ஏற்கனவே பிஜு - சந்தியா தம்பதியர் மகன் ஓராண்டுக்கு முன் புற்றுநோய் பாதித்து மரணமடைந்த நிலையில் தற்போது கணவரும் மரணமடைய, சந்தியா குடும்பம் சிகிச்சைக்கு போதிய பணவசதியின்றி தவிக்கும் தகவல் கேள்விப்பட்டு ராஜகிரி ஆஸ்பத்திரியை தொடர்பு கொண்ட நடிகர் மம்முட்டி சந்தியாவுக்கு தேவையான சிகிச்சையளிக்கவும், செலவாகும் தொகை முழுவதும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மம்முட்டி செய்துவரும் பற்பல அறச் செயல்கள் குறித்து இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- குளச்சல் அஜீம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset