நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி வழக்கின் பின்னணியில் இருந்த முக்கிய மூளையாக செயல்பட்ட ஜோ லோவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை: டான்ஸ்ரீ ஷாபி

கோலாலம்பூர்:

1 எம்டிபி வழக்கின் பின்னணியில் இருந்த முக்கிய மூளையாக செயல்பட்ட ஜோ லோவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

1 எம்டிபி வழக்கில் தொடர்புடையதாக, தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோவை மீண்டும் அழைத்து வருவதற்கான வாய்ப்பை அரசு தரப்பு தவறவிட்டதாக அவர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

1 எம்டிபி நிதி மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக ஜோ லோ கூறியதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் இருக்கும் இடம் இன்னும் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.

தப்பியோடியவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனது வழக்கை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அரசுத் தரப்புக்கு உள்ளது. ஆனால்

அவரை மீண்டும் அழைத்து வருவதற்கான முயற்சிகள் இன்னும் முட்டுச்சந்தை சந்தித்துள்ளன.

தொழிலதிபரை கண்டுபிடிக்க அதிகாரிகள் போதுமான முயற்சிகளை மேற்கொண்டார்களா என்றும் மூத்த வழக்கறிஞரான அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset