நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடகுக் கடையில் 5.7 மில்லியன் தங்கக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட காதலன், கடை மேலாளர் கைது: போலிஸ்

பாசிர் மாஸ்:

அடகுக் கடையில் நடந்த 5.7 மில்லியன் தங்கக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட காதலன், கடை மேலாளரை போலிசார் கைது செய்தனர்.

கிளந்தான் போலிஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மமட் இதனை தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு அடகுக்கடை மேலாளரும் அவரது காதலனும், அவர் பணிபுரிந்த இடத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 5.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக நம்பப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணைகளில் உதவுவதற்காக ஒரு பாதுகாவலர் உட்பட ஐந்து ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

பாசிர் மாஸ், கோத்தா பாரு, ரவாங் ஆகிய இடங்களில் நடந்த மூன்று தனித்தனி சோதனைகளில் 26 முதல் 66 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

பாசிர் மாஸ் நகரில் உள்ள ஒரு அடகுக் கடையில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு தனது துறைக்கு தகவல் கிடைத்ததது.

சந்தேக நபர் கிருமிநாசினி தெளித்து, வாடிக்கையாளர்களை நோக்கி கத்தியைக் காட்டி, பின்னர் 5.7 மில்லியன் ரிங்கி மதிப்புள்ள பெட்டகத்தில் 10.9 கிலோகிராம் நகைகளுடன் தப்பிச் சென்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, அதே நாளில் மாலை 4 மணிக்கு பாசிர் மாஸில் முதல் நடவடிக்கையைத் தொடங்கினோம்.

நான்கு பெண்களையும், ஒரு பாதுகாவலர் உட்பட ஒரு பணியாளரான ஒருவரையும் கைது செய்தோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset