நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவர் பாதுகாப்பு பிரச்சினைகளில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது: ஃபட்லினா

கோலாலம்பூர்:

மாணவர் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு விசாரணையையும் தனது அமைச்சு ஒருபோதும் தாமதப்படுத்தாது.

கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை வலியுறுத்தினார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் எப்போதும் கல்வியமைச்சின் முன்னுரிமை.

எந்த சூழ்நிலையிலும் அதை பொறுத்துக்கொள்ள முடியாது.

மாணவர் விடுதியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும், சமீபத்தில் மூன்றாவது மாடியில் இருந்து ஒரு மாணவர் விழுந்த சம்பவம் உட்பட உடனடி கவனம் செலுத்தப்பட்டு காரணத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய முழுமையாக விசாரிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் போலிசாருக்கு உடனடி அறிக்கை அளிக்கப்பட்டது.

அவர்கள் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) இன் கீழ் ஒரு விசாரணைக் அறிக்கையை திறந்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடியும் வரை, பள்ளியின் தலைமையாசிரியர், மாணவர் விவகாரங்களுக்கான மூத்த உதவியாளர்,  தலைமை வார்டன் ஆகியோரை சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்னாம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டனர்.

மேலும் விசாரணை செயல்முறை முழுவதும் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

மாணவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

மக்களவையில் கோல கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் கமால் அஷாரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்துப்னபூர்வமாக இவ்வாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset