நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம்: பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்

பத்து பகாட்:

சிறுவனின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெற்றோருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கத்தியால் தொண்டையில் வெட்டப்பட்ட சிறுவனின் பெற்றோர் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டனர்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326 மற்றும் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (ஏ) இன் கீழ் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொள்ள ஏதுவாக, 41 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக இன்று முதல் நாளை வரை தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நூராசிதா ஏ ரஹ்மான் பிறப்பித்தார்.

முன்னதாக, தம்பதியினர் காலை 8.30 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர்.

போலீசார் தங்கள் விசாரணையை முடிக்க உதவும் வகையில், சந்தேக நபர்கள் இருவரும் நேற்று மாலை 4 மணிக்கு பத்து பகாட் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset